திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அனைத்து வார்டுகளிலும் வெற்றிபெற வேண்டும்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. பேரூர் செயலாளர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, திமுக போட்டியிடும் அனைத்து வார்டுகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்கள் வெற்றி பெருவதற்கான பல்வேறு வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். இதில்,  மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி குணசேகரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: