×

ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் இடையே நடுரோட்டில் படுத்து கிடக்கும் மாடுகளால் அடிக்கடி விபத்து: காப்பகத்தில் ஒப்படைக்க பொதுக்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு கார், லாரி, கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்ல பெரும்புதூர் - சிங்கபெருமாள்கோயில் சாலை, வண்டலூர் - வாலாஜாபாத் ஆகிய சாலைகளை பயன்படுத்துகின்றனர்.

இதனால் பெரும்புதூர் - சிங்கபெருமாள்கோயில் சாலை, வண்டலூர் - வாலாஜாபாத் சாலை ஆகிய 2 சாலைகளை நான்கு வழிச்சாலையாகவும், 6 வழிச்சாலையாகவும் அகலப்படுத்தி சீரமைக்க கடந்த 2009ம் ஆண்டு  ₹300 கோடி நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து, பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள்கோயில் வரை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளுக்கு நாள் இந்த சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி பெரும்புதூர் - ஒரகடம் சாலை இடையே உள்ள வல்லம், வடகால், மாத்தூர், போந்தூர், வல்லகோட்டை ஆகிய பகுதிகளில் சாலையில் படுத்துகிடக்கும் மாடுகளால் தொல்லையும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பெரும்புதூர் - ஒரகடம் சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தி சீரமைகப்பட்டுள்ளது. இச்சாலையின் இடையே உள்ள போந்தூர், வடகால், வல்லம், வல்லகோட்டை, மாத்தூர் ஆகிய பகுதிகளில் மாடுகள் சாலையிலேயே படுத்து கிடக்கின்றன.  இரவு நேரங்களில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் படுத்துகிடக்கும் மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும், சாலையில் படுத்துகிடக்கும் மாடுகளால் தினமும் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சாலையில் படுத்து கிடக்கும் மாடுகளை பிடித்து, அரசு காப்பகத்தில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sriperumbudur ,Oragadam , Sriperumbudur - Frequent accidents involving cows lying in the middle of the road between Oragadam: Public demand to hand over to the archive
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு