பொன்னேரி அருகே அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்: காங்.சார்பில் நிதியுதவி

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரும்பேடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளரின் மகள் அனுஷா. இவர்  அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்தார். தொடர்ந்து நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அனுஷா தமிழக அரசின் 7.5%இட ஒதுக்கீட்டின் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில சேர்க்கைக்கான ஆணை பெற்றார். இதனையடுத்து மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் என பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.

திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் ஆகியோர் மாணவியின் வீடு தேடி  நேரில் சென்று அவரை வாழ்த்தினர். தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் எம்பி, எம்எல்ஏ ஆகியோர் மாணவிக்கு ரூ. 50,000  நிதி உதவி அளித்தனர்.  இதில் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், பொன்னேரி மீஞ்சூர் நிர்வாகிகள் ஆகியோர்  உடனிருந்தனர். மேலும் மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அப்போது மாணவியிடம் தெரிவித்தனர்.  மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவியை எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வீடு தேடி வந்து நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: