கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (61). ஊராட்சி துணை தலைவரான இவர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகாரில், கோவை வடக்கு தாசில்தார் கோகிலாமணி, கடனளிப்பு சான்றிதழ் தர ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக கூறியிருந்தார். போலீசார் ஆலோசனையின்படி ரூ.25 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தபோது கோகிலாமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தாசில்தார் கோகிலாமணியை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.