×

சிஎம் வேட்பாளர் தேர்வே வெற்றியை தீர்மானிக்கும்: காங்கிரசுக்கு சித்து ‘செக்’

சண்டிகர்: ‘ஆட்சி அமைக்க தேவையான 60 எம்எல்ஏக்கள் கிடைப்பார்களா என்பதை தீர்மானிப்பதே முதல்வர் வேட்பாளர் தேர்வுதான்’ என சித்து கூறி உள்ளார். பஞ்சாப்பில் 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 20ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் சார்பில் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாநில கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தேர்வு செய்யப்படுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசாரத்திற்காக லூதியானா வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது பிரசாரத்தில் கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சித்து நேற்று அளித்த பேட்டியில், ‘‘மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவர், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதன் மூலம் மட்டுமே, ஆட்சி அமைக்க தேவையான 60 எம்எல்ஏ.கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய முடியும். நான் பதவி, அதிகாரத்திற்கு ஆசைப்படுவன் அல்ல. மாநிலத்தை முன்னேற்றுவதற்கான சிறந்த திட்டத்தை யார் கொண்டிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயார்,’’ என்றார். முதல்வர் வேட்பாளரை ராகுல் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சிக்கு மறைமுக நெருக்கடி அளிக்கும் வகையில் சித்து இவ்வாறு கூறியிருப்பதாக கருதப்படுகிறது.

Tags : CM ,Sidhu ,Czech ,Congress , CM candidate selection will determine victory: Sidhu 'Czech' to Congress
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...