×

ஆஸி. பயிற்சியாளர் ராஜினாமா

ஆஸ்திரேலியா ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜூன் மாதம் வரை அவரின் பதவிக்காலம் உள்ள நிலையில் இன்று காலை ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  கடந்த 2018ம் ஆண்டு முதல் பயிற்சியாளராக இருந்து வந்தார். இவரின் பயிற்சியின் கீழ் டி.20 உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

ஆஸி. அடுத்த வாரத்தில் இலங்கையுடன் 5டி.20 போட்டி, அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், தற்போது உதவிப் பயிற்சியாளரக உள்ள ஆண்ட்ரூ மெக்டொனால்ட் இடைக்கால அடிப்படையில் பொறுப்பேற்கலாம்.

Tags : Aussie , Aussie. Coach resigns
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்