2வது கணவர் ராமசாமியை மிரட்டியதாக முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: 2வது கணவர் ராமசாமியை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2வது கணவர் ராமசாமியை அவரது வீட்டுக்குள்ளேயே விட மறுத்து மிரட்டியதாக முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. ராமசாமி புகாரின்பேரில் சசிகலா புஷ்பா மீது சென்னை ஜே.ஜே.நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் தங்கியுள்ள ராமசாமி, கடந்த ஜனவரி 13ம் தேதி தனது மகளுடன் சென்னை வந்துள்ளார். சென்னையில் தனது அண்ணா நகர் வீட்டுக்கு சென்றபோது சசிகலா புஷ்பா, உள்ளே அனுமதிக்காமல் தடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

Related Stories: