×

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் தந்தால் மாற்று இடம் குறித்து பரிசீலனை; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர்  குடியிருப்போர் நல சங்க தலைவர் அண்ணாதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த மனுவில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு, அரசின் மக்கள் நல திட்டப்படி பட்டா வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும்  நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல்  ஜெ.ரவீந்திரன், ஆக்கிரமிப்பு செய்த இடத்தை குறிப்பிட்ட கால  அவகாசத்துக்குள் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று  இடம் வழங்க தயாராக  உள்ளோம் என்று தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள்,  உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மனுதாரர் தரப்பு  வழக்கறிஞருக்கு அவகாசம் அளித்து விசாரணையை வரும் 9ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.


Tags : Inzambakkam Bethel City ,Government of Tamil Nadu , Inzambakkam Bethel City Consideration for an alternative location if the vacant land is guaranteed to be vacated; Government of Tamil Nadu Information in the High Court
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...