ரூ.38 கோடி மதிப்பிலான 2 வீடுகளை ஷில்பா ஷெட்டிக்கு கொடுத்த கணவர்

மும்பை: ரூ.38 கோடி மதிப்பிலான 2 வீடுகளை நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அவரது கணவர் ராஜ் குந்த்ரா வழங்கினார். ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் மும்பை ஜூஹூ பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் ராஜ்குந்த்ராவுக்கு வீடு உள்ளது.

அதே பகுதியில் தனி வீடு ஒன்றும் உள்ளது. இவைகளின் மதிப்பு ரூ.38 கோடி 5 லட்சம். இந்த இரண்டு வீடுகளையும் ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு ராஜ் குந்த்ரா மாற்றி தந்துள்ளார். 5,996 சதுர அடி கொண்ட இந்த வீடுகளுக்கு இனி ஷில்பா ஷெட்டி சொந்தக்காரராக இருப்பார்.

Related Stories: