எங்கள் காதல் உண்மையானது; ஜாக்குலினை விட்டு விடுங்கள்; கைதான தரகர் சுகேஷ் கடிதம்

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கும், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. ஜாக்குலின் தற்போது விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார். இந்த நிலையில் சுகேஷ் தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது தனிப்பட்ட சில புகைப்படங்கள் (ஜாக்குலினுடன் இருப்பது) இணையத்தில் பரவி வருவது மிகுந்து வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைவதாகும். நானும் ஜாக்குலினும் காதலித்தோம். எங்கள் காதல், பணத்தின் அடிப்படையில் உருவானதல்ல. எங்களுக்கிடையில் இருந்த உறவு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. தயவுசெய்து ஜாக்குலினை தவறாகக் காட்டவேண்டாம். அவர் என்னை எந்த எதிர்பார்ப்புமின்றி காதலித்தார். இந்த வழக்குக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் என்னை காதலித்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. அவரை விட்டு விடுங்கள். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சுகேஷ் ஏற்கெனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: