×

கலெக்டர் ஆர்த்தி தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளில் பழங்குடியின இருளர், நரிக்குறவர் குழந்தைகளை இனம் கண்டு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டி கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 53 பழங்குடியின மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர்கள்  கலந்து கொண்டனர். கலெக்டர் ஆர்த்தி, மாணவர்களிடம் நேரடியாக உரையாடினார்.

அப்போது, கல்வியின் முக்கியத்துவம், அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி, அவர்களது குறைகளை கேட்டு,  அதை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றார். மேலும், மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் தொடர்பான கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து வழங்கப்படும். மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில வேண்டும். அருகில் உள்ள குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Aarti , Consultative meeting for out-of-school children chaired by Collector Aarti
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...