×

சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை:  சென்னை  மாநகராட்சிமண்டலம் 1, பகுதி 1-14 வரை பதிவான வாக்குகளை திருவொற்றியூர், டி.எச்.ரோடு, வெள்ளையன் செட்டியார் மெட்ரிக் பள்ளி, மண்டலம் 2, பகுதி 15-22 வரை, மணலி, நெடுஞ்செழியன் சாலை, சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி, மண்டலம் 3, பகுதி 23-33 வரை, அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் ரோடு, சூரப்பேட்டை, வேலம்மாள்  பொறியியல் கல்லூரி, மண்டலம் 4- பகுதி 34-48 வரை, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், காமராஜ் சாலை, அரசு பாலிடெக்னிக்  கல்லூரி, மண்டலம் 5, பகுதி 49-63 வரை, பிராட்வே, புரசைவாக்கம், பாரதி பெண்கள் கல்லூரி, மண்டலம் 6, பகுதி 64-78 வரை,  திரு.வி.க.நகர், நம்மாழ்வார்பேட்டை, மண்டலம் 7, பகுதி 79-93 வரை, அம்பத்தூர், முகப்பேர், மண்டலம் 8, 94-108 வரை பச்சையப்பன் கல்லூரி, மண்டலம் 9, பகுதி 109-126 வரை, லயோலா  கல்லூரி, மண்டலம் 10, பகுதி 127-135 வரை விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி, மண்டலம்  11, பகுதி 143-155 வரை, மதுரவாயல் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, மண்டலம் 12, பகுதி 156-167 வரை, ஆலந்தூர் ஏ.ஜே.எஸ். மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 13, பகுதி 168-180 கிண்டி, அண்ணா  பல்கலைக்கழகம், மண்டலம் 14, பகுதி 181-191 வரை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல்  கல்லூரி, மண்டலம் 15, பகுதி 192-200 வரை சோழிங்கநல்லூர், மேடவாக்கம், முகமது சதக் கலை அறிவியல்  கல்லூரிகள் என 200 வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வகையில்  15 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Chennai Corporation , In 15 places in Chennai Corporation Organization of Counting Centers: Officials Information
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...