×

வாலாஜாவில் வரும் 6ம்தேதி 300 ஆண்டு பழமையான காளிகாம்பாள் கோயில் மஹா கும்பாபிஷேகம்

வாலாஜா: வாலாஜாவில் உள்ள கன்னாரத்ெதருவில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. விஸ்வகர்மா சமுதாயத்தினரால் கடந்த 300ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டது. 5நிலை ராஜகோபுரம் கொண்ட இந்தக்கோயில் நகரின் நடுநாயகமாக உள்ளது. இந்த கோயிலில் காளிகாம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்தும், விராட் விஸ்வேஸ்வரர் ஸ்தூல சொரூபமாகவும் காட்சியளிக்கிறார். இதேபோல்   ஆதிகாமாட்சி, ஈஸ்வர சன்னதி, பாலஆஞ்சநேயர், நவகிரகம், வன்னியமர விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளது.

அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. இதற்கான கும்பாபிஷேகம் பூஜைகள் இன்று தொடங்குகிறது. காலை மங்கல இசையுடன் கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, மஹாலஷ்மி, நவகிரக யாகங்கள் நடைபெறுகிறது. பிற்பகல் 2மணிக்கு அனைத்து தெய்வங்களும், ராஜகோபுர கலசங்களின் கரிக்கோல யாத்திரை நடைபெறுகிறது. நாளை காலை 8மணிக்கு 2ம்கால யாகபூஜையும், நூதன பிம்ப பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.

ெதாடர்நது வரும் 6ந்தேதி காலை 8மணிக்கு கலச புறப்பாடும், நந்தல் மடாலய 85வது பீடாதிபதி சிவராஜஞாணாச்சார்ய குருசுவாமிகள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் வித்யா உபாசகர் ஜோதிமுருகாச்சாரியார் மற்றும் பிரகாஷ்சர்மா ஆகியோர் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் கும்பாபிஷேகம் மற்றும் பல்வேறு பூஜைகளை செய்கின்றனர். கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் காந்தி மற்றும் விஸ்வாஸ் தொண்டு நிறுவன தலைவர் கமலாகாந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

வரும் 7ந்தேதி கலைமாமணி ஷன்மதி தலைமையிலான நடராஜபெருமான் நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை காளிகாம்பாள் கோயில் விஸ்வகர்மா டிரஸ்ட் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Kalikambal Temple Maha Kumbabhishekam ,Walaja , The 300 year old Kalikambal Temple Maha Kumbabhishekam will be held on the 6th at Walaja
× RELATED வாலாஜா பஸ்நிலையம் மேம்படுத்தும்...