×

பாஜவில் இருந்து விலகிய மாஜி முதல்வர் மகன் சுயே. வேட்பாளர் உத்பல் பாரிக்கர் தீவிர தேர்தல் பிரசாரம்

கோவா: தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் பாஜவில் இருந்து விலகிய மாஜி முதல்வர் மகன் உத்பல் பாரிக்கர் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார். அவர் வீடு வீடாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கோவாவில் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பனாஜி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் பாஜ தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார். இந்நிலையில் கோவாவில் போட்டியிடும் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ வெளியிட்டது.

அதில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து உத்பல் பாரிக்கர் பாஜவில் இருந்து விலகினார். இதுதொடர்பாக கோவா பாஜ தலைவர் சதானந்த் தனவதேவுக்கு ராஜினாமா கடிதத்தை உத்பல் பாரிக்கர் அனுப்பினார். இதையடுத்து பனாஜி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர், வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பனாஜியில் வீடு வீடாக பிரசாரம் செய்தார். கட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு பாஜ அளித்த வாக்குறுதிகள் குறித்து கேட்டதற்கு, “பாஜ எனக்கு புதிய உறுதிமொழிகளை அளித்ததாக கூறுகிறது.

நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. பனாஜி மக்கள் என்னை ஆதரிப்பார்கள்” என்று பாரிக்கர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘பல பிரச்சனைகள் உள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் எனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன். சாலைகள், வடிகால் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியை முறையாக நிறைவேற்ற வேண்டும். இதை செய்தால், பொருளாதாரம் புத்துயிர் பெறும்’ என்றார்.

Tags : Sue ,BJP ,Utpal Parrikar , Sue, the son of a former chief minister who left BJP. Candidate Utpal Parrikar is campaigning vigorously
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...