×

தேர்தல் அலுவலருடன் பாஜவினர் வாக்குவாதம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் இன்று காலை முதலே பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர். பாஜக வேட்பாளர்கள் மண்டல அலுவலகத்தில் வழங்கப்பட்ட டோக்கன்களை பெற்றுக்கொண்டு வரிசையில் காத்திருந்தனர். திடீரென பாஜகவினர், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில், உதவி தேர்தல் அலுவலர் சுரேஷின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், பாஜகவினரை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து பாஜக வேட்பாளர்களிடம் கேட்டபோது, “நாங்கள் காலையிலிருந்து வரிசையில் காத்துநிற்கிறோம். எங்களுக்கு பின்னால் வந்த அதிமுகவினரின் வேட்பு மனுவை பெறுகின்றனர்.  எங்களது மனுக்களை வாங்காமல் அலைக்கழிக்கின்றனர். இதனால்தான் தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்\” என்றனர்.  இந்த சம்பவத்தால் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Pajavinar , Election Officer, Baja, Argument
× RELATED கேரளாவில் பாஜவினர் கொலைக்கு முதல்வர்...