நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி தொடர்ந்த பண மோசடி வழக்கு!: சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: பண மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதான வழக்கு மத்தியக் குற்றப்பிரிக்கு மாற்றப்பட்டது. நடிகர் சூரி அளித்த பண மோசடி வழக்கை சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிக்க நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார். விசாரணையை கூடுதல் ஆணையர் மேற்பார்வை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரமேஷ் குடவாலா மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி சூரி மனுதாக்கல் செய்திருந்தார்.

Related Stories: