×

நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது: நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி

டெல்லி: நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டியளித்தார். மசோதா திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை எனவும் கூறினார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக ஆளுநரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது. நீட் தேர்வு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிரானது என்பதை ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது என கூறினார். நீட் தேர்வு ஏழைய எளிய மாணவர்களுக்கு உதவும் என்ற கவர்னரின் கருத்து சரியானதல்ல எனவும் கூறினார்.

நீட் விலக்கு சட்டமசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என கூறினார்.  நீட்  மசோதாவை திருப்பி அனுப்பியதையடுத்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் இருந்து தமிழக எம்.பி.க்கள் 2-வது நாளாக இன்றும்  வெளிநடப்பு செய்தனர். ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கண்டன முழக்கம் எழுப்பி வந்தது.  ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Governor ,Rabindranath Tagore ,NEED Review Committee , Need Exemption, Bill, Governor, Shock, Rabindranath
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...