நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது: நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக ஆளுநரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது என்று நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிரானது என்பதை ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது. மசோதா திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை. நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் என்ற ஆளுநர் கருத்து சரியானதல்ல என்று குறிப்பிட்டார்.

Related Stories: