×

ஓவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு

காசியாபாத்: உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீரட் மற்றும் கிதோரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்  அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தே ஹாதுல் முஸ்லிம் கட்சியின் தலைவரும், மக்களவை எம்பி.யுமான ஓவைசி கலந்து கொண்டார். பின்னர், அவர் காரில் டெல்லி திரும்பிக் கொண்டு இருந்தார். ஹபுர் - காசியாபாத் நேதிய நெடுஞ்சாலையில் சிஜர்சி சுங்கசாவடியில் ஓவைசியின் கார் நின்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஓவைசியின் கார் மீது திடீரென துப்பாக்கியால் நான்கு முறை சுட்டார். இதில் காரின் டயர் பஞ்சாரானது.  அதிர்ஷ்டவசமாக காரில் அமர்ந்திருந்த ஓவைசி உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அப்போது அவர் அளித்த பேட்டியில், . இந்த சம்பவத்துக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்,” என்றார்.

Tags : Owaisi , Owaisi fired at the car
× RELATED நாடாளுமன்றத்தில் முஸ்லிம்...