புனித் ராஜ்குமாருக்கு டப்பிங் பேசிய சிவராஜ்குமார்

சென்னை: மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த படத்துக்கு அவரது அண்ணன் சிவராஜ் குமார் டப்பிங் பேசினார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக நடித்த படம், ஜேம்ஸ். இதில் அவர் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ம் தேதி வெளி வருகிறது. இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தில் புனித் ராஜ்குமாருக்கு அவரது அண்ணன் சிவராஜ் குமார் டப்பிங் பேசினார். தம்பியின் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர் டப்பிங் பணிகளை தொடங்கினார்.

இதுகுறித்து சிவராஜ்குமார் கூறியதாவது: இது ஒரு நெகிழ்வான பணி. மறைந்த தம்பியை திரையில் பார்க்கும்போது எல்லாம் கண்ணீர் வருகிறது. அதை மறைத்துக் கொண்டு பேச வேண்டியது இருந்தது. புனித் மாதிரி எனக்கு சரளமாக கன்னடம் பேச வராது. அதனால் 3 நாள் பயிற்சி எடுத்துதான் பேசினேன். படக்குழுவினர் விடுத்த வேண்டுகோளை தவிர்க்க முடியாமல்தான் இதை செய்தேன். ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Related Stories: