×

கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் இளம் வேட்பாளராக களம் இறங்கும் 2k கிட்ஸ் அஸ்வின்: வாய்ப்பு கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் தற்போது  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனல் பறக்கும் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கள்ளகுறிச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இளம் வேட்பாளர்களை களம் காணுகிறது. திமுக. கள்ளக்குறிச்சி 3வது வார்டு வேட்பாளராக களம் இறங்கும் 2k கிட்ஸ் அஸ்வின். இவர் சமூகப் பணி இளநிலை படிப்பை முடித்துவிட்டு இப்பொழுது சமூக பணியாற்ற அரசியலில் களமிறங்கி உள்ளதாக கூறினார்.

நகர்ப்புற தேர்தலில் எனக்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் அவர்களுக்கு  நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு வழங்கிய வாய்ப்பினை பயன்படுத்தி வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகளான மின்விளக்குகள், கழிவுநீர் கால்வாய்கள்,  குடிநீர் பிரச்சினைகள் என அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பதே எனது முதல் பணி என கூறினார்.  மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மட்டுமே இளைஞர்களுக்கும் மகளிருக்கும் அதிக  வாய்ப்பு வழங்கியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Tags : 2k Kids ,Aswin ,Dimuka ,Kallakuruchi , Counterfeit, young candidate, 2k Kids, Aswin
× RELATED மைதான் இந்தி விமர்சனம்