×

சண்டை, சச்சரவு இல்லாமல் ஒரே வீட்டில் தனது 8 காதல் மனைவிகளுடன் வாழ்ந்து வரும் தாய்லாந்து இளைஞர்!! .

பாங்டாக்: தாய்லாந்தில் ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் மகிழ்ச்சியோடு வாழும் நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளார். அவர் 8 பேரையும் வெறித் தனமாக காதலித்து திருமணம் செய்தார் என்பது கூடுதல் அதிர்ச்சி. தாய்லாந்தில் பச்சை குத்தும் தொழில் செய்து வரும் Ong Dam Sorot-ன் திருமண வாழ்க்கை குறித்த பதிவு தான் இப்போது ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது. அடுத்தடுத்து 8 திருமணங்களை செய்துள்ள Ong Dam Sorot-ன் 8 மனைவிகளுடனும் சண்டை சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.

கல்யாண வீடு, கடற்கரை, ஆலயம், மருத்துவமனை, முகநூல், டிக் டாக் என பல இடங்களில் சந்தித்த பெண்களை காதலித்து திருமணம் செய்துள்ளார் Ong Dam Sorot. அனைத்து மனைவிகளுக்கும் தெரிந்தே ஏற்கனவே திருமணமங்கள் ஆனதே வெளிப்படையாக கூறியே 8 திருமணங்கள் செய்துள்ளார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தங்களுக்குள் சண்டை வந்ததே இல்லை என்றும் 8 பேரையும் அக்கறையோடு Ong Dam Sorot கவனித்து கொள்வதாகவும் அவரின் மனைவிகள் கூறுகின்றனர். 


Tags : Thailand , தாய்லாந்து, இளைஞர்,திருமணம் ,மனைவி
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...