யஷ் துல் - ஷேக் ரஷீத் பொறுப்பான ஆட்டம்

ஆன்டிகுவா: ஐசிசி யு19 உலக கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டன் யஷ் துல் - ஷேக் ரஷீத் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா அபாரமாக ரன் குவித்தது. கூலிட்ஜ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 12.3 ஓவரில் 37 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஷேக் ரஷீத் - கேப்டன் யஷ் துல் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 204 ரன் சேர்த்து அசத்தியது. யஷ் 110 ரன் (110 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டாக, அடுத்த பந்தில் ரஷீத் (94 ரன், 108 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்தியா 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்திருந்தது.

Related Stories: