×

சரத்குமார், மகிமாவுக்கு கொரோனா தொற்று

சென்னை: நடிகர் சரத்குமார், நடிகை மகிமா நம்பியாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து டிவிட்டரில் சரத்குமார் கூறும்போது, ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். டிவிட்டரில் மகிமா நம்பியார் கூறுகையில், ‘கொரோனா ஏற்பட்ட முதல் 3 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. இப்போது உடல் நலம் தேறி வருகிறேன். டாக்டர்கள், எனது குடும்பத்தார், நண்பர்களுக்கு நன்றி’ என்றார். இந்தி நடிகை ஷபானா ஆஸ்மிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags : Sarathkumar , Sarathkumar, corona infection to mahima
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....