×

விஜய விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் விஜய விநாயகர் கோயில் உள்ளது. இக் கோயிலில் குடமுழுக்கு 4ம் தேதி (நாளை) நடக்கிறது. நாளை காலை  9.30 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பாடு, காலை 9.45 மணிக்கு விமான திருக்குடமுழுக்கு நன்னீராட்டு, காலை 10 மணிக்கு விஜய விநாயகருக்கு திருக்கடமுழுக்கு நன்னீராட்டு விழா, அலங்காரம், அர்ச்சனை தீபாராதனை நடத்தப்பட்டு அருள் பிரசாதம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Vijaya Ganesha Temple , Kumbabhishekam tomorrow at Vijaya Ganesha Temple
× RELATED புதுக்கோட்டை விஜய் பேலஸ் விஜய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்