×

தமிழகம் முழுவதும் இந்த மாதம் 25 கோயில்களில் குடமுழுக்கு: அறநிலையத்துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 25 கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு நடக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கும்பகோணம்,  திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், மயிலாடுதுறை லாகடம் ஸ்ரீ காசி  விஸ்வநாதர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கொங்குநாச்சி அம்மன், சென்னை வடபழனி ஆண்டவர், திருவண்ணாமலை மாவட்டம்  பூதநாராயண பெருமாள், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை தில்லைவிநாயகர், பட்டுக்கோட்டை காத்தாயி அம்மன், கந்தர்வகோட்டை அங்காள  பரமேஸ்வரி, திருப்பூர் மாவட்டம், அலகுமலை முத்துக்கமார பால  தண்டாயுதபாணி சுவாமி, மதுரை மாவட்டம் பேரையூர் காளமேக பெருமாள்  கோயில் உட்பட்ட 50 கோயில்களில் கடந்த 5 மாதங்களில் குடமுழுக்கு  நடத்தப்பட்டது.

தற்போது திருச்சி மாவட்டம், லால்குடி சீனிவாச  வரதராஜப்பெருமாள், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி  திருவழுதீஸ்வரர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி செல்லப்பர்  வகையறா, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் விஸ்வநாதசுவாமி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வளரொளீஸ்வரர், தஞ்சாவூர்  மாவட்டம் வெண்ணாற்றாங்கரை ஆனந்த வல்லியம்மன், ஈரோடு மாவட்டம்  கோபிசெட்டிப்பாளையம் கரியகாளியம்மன், திருநெல்வேலி மாவட்டம்  ராதாபுரம் சுப்பிரமணிய சுவாமி, பாபநாசம் தாமோதர விநாயகர் என்ற  இரட்டைப் பிள்ளையார் கோயில், கடையநல்லூர் முத்துகிருஷ்ணபுரம்  முத்தாரம்மன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில்  வருகிற 6ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

வரும் 11ம் தேதி புதுக்கோட்டை  மாவட்டம் திருமயம் சீனிவாச பெருமாள் கோயில், தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை, ஆலந்தூர் வீரனார் மற்றும் அய்யனார்  கோயில், 7ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் தட்டாரப்பட்டு தேவி  குங்குமக்காளியம்மன் கோயில், 11ம் தேதி கடலூர் மாவட்டம்  பெரியகண்டியாங்குப்பம் வெண்மலையப்பர் கோயில், பெரம்பலூர்  மாவட்டம் நொச்சியம் லட்சுமி நாராயண பெருமாள்,  20ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பாளுர் கல்யாண சுந்தரியம்மன் கோயில் உட்பட 25க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு இந்த மாதம்  சிறப்பாக நடைபெற உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Kudamulu , Kudamuluku in 25 temples across Tamil Nadu this month: Charitable Department Information
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...