×

21 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற 21 தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் சிறை பிடித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை இனியும் தொடரக்கூடாது.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. தற்போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 2 படகுகளை மீட்கவும் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக மீனவர்களுக்கு இனிமேல் இலங்கை கடற்படையினரால் பாதிப்புகள் இருக்கக்கூடாது என்பதை மத்திய அரசு, இலங்கைக்கு உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government of Sri Lanka ,Union government ,G.P. KK Vasan , Government of Sri Lanka should hold immediate talks to release 21 Tamil Nadu fishermen: GK Vasan urges govt
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...