வி.கே.புரம்: பாபநாசம் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு காரணமாக கடந்த 26ம்தேதி முதல் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்கவும், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு முடிந்த நிலையில் சுற்றுலா பகுதிகளான அகஸ்தியர் அருவி,
மாஞ்சோலை பகுதிகள் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகள் கொரோனா கட்டுப்பாடு நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு இன்று (2ம்தேதி) முதல் அனுமதிக்கப்படும் என முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் வன உயிரின காப்பாளர் செண்பகபிரியா தெரிவித்துள்ளார். அதன்படி வேன், கார், சுற்றுலா பஸ்களில் வந்த பயணிகள் அகஸ்தியர் அருவியில் சமூக இடைவெளி விட்டு நீராடி, சொரித்து முத்து அய்யனார் கோயிலுக்கு சென்றனர். சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.