×

பெங்களூரு சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்த வழக்கு..: சசிகலா, இளவரசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், மீதம் உள்ள 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். தற்போது சிறை தண்டனை முடிந்து அவர் வெளியில் உள்ளார். இந்தநிலையில், சிறையில் அவர்கள் இருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பல்வேறு வசதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில், பல ஆண்டுகளாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று ஊழல் தடுப்பு போலீஸ் சசிகலா, இளவரசிக்கு எதிராக பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் முழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.     


Tags : Bangalore ,Sasikala ,Princess , Bangalore jail bribery case: Sasikala files charges against princess
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...