×

அகமதாபாத் வந்தடைந்த வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள்

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி.20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் போட்டி முறையே பிப்.6,9,11ம்தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் அகமதாபாத் சென்றடைந்த இந்திய அணியினர் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டி.20 தொடரை (3-2)வென்ற கையோடு வெஸ்ட்இண்டீஸ் அணியினர் இன்று அதிகாலையில் அகமதாபாத் வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் பயிற்சியை தொடங்குவர்.


Tags : Ahmedabad , West Indies players arrive in Ahmedabad
× RELATED வாபஸ் பெற்ற காங். வேட்பாளர்