பாமக சார்பில் போட்டியிடும் திருத்தணி நகராட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தலைவர் ஜி.கே. மணி அறிவிப்பு

சென்னை: திருத்தணி நகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், திருத்தணி நகராட்சியில் மொத்தமுள்ள 21 வட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அடங்கிய முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி குள்ளுர் பகுதியில் கோமலா (வார்டு 1), ஏரிகரை, பாஞ்சாலி (வார்டு2), பைபாஸ், அமுதா (வார்டு 3), காந்திரோடு, பி.சிரஞ்சிவி தருமன் (வார்டு 4), முருகப்பநகர், தமிழரசி பாக்கியநாதன் (வார்டு 5), காந்திரோடு மெயின், ஏ.கே.மணி (வார்டு 6), கமலா தியேட்டர், கேப்டன் பிரபாகரன் (வார்டு 7), நேருநகர், எம்.கோபி (வார்டு 8), ஆச்சாரி தெரு, எம்.சதிஷ் (வார்டு 9), குமாரகுப்பம், கே.ஜி.பெருமாள் (வார்டு 10), அக்கைய்ய நாயுடு ெதரு, கே.நளினி (வார்டு 11), ம.பொ.சி.சாலை, எஸ்.பூவரசன் (வார்டு 12), மார்க்கெட், ஆர்.சாவித்ரி (வார்டு 13), சந்து தெரு, எஸ்.கலைவாணி (வார்டு 14), ஆறுமுகசாமி கோவில் தெரு, எம்.கனிமொழி (வார்டு 15), ஜோதிநகர், ஆர்.சுதா (வார்டு 16), சன்னதி தெரு, பி.மதன் (வார்டு 17), திருக்குளம், ஆர்.பூங்கொடி (வார்டு 18), இந்திரா காந்தி நகர், எம்.கார்த்திக் ( வார்டு 19), பெரியார் நகர், எம்.மணிகண்டன் (வார்டு 20), எம்.ஜி.ஆர்.நகர், எஸ்.அம்மு (வார்டு 21) ஆகியோர் உள்ளாட்சித் தேர்தல்களில், திருத்தணி நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: