×

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பைனலில் இங்கிலாந்து

நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ்பெல் நாட்அவுட்டாக 56, அலெக்ஸ் ஹார்டன் 53, ஜார்ஜ் தாமஸ் 50 ரன் எடுத்தனர். பின்னர் களம்இறங்கிய ஆப்கானிஸ்தான் 47ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களே எடுத்தது.

இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கன் அணியில் அதிகபட்சமாக அல்லா நூர் 60 ரன் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ரெஹான் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்தின் ஜார்ஜ்பெல் ஆட்டநாயகன்விருது பெற்றார்.


Tags : England ,Afghanistan , England beat Afghanistan in final
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது