×

செம்பனார்கோயில் அருகே குளத்தை ஆக்கிரமித்த தாமரைகள் அகற்றப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே அன்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகள் குளத்தில் உள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து வந்தன.இவ்வாறு பயன்பாட்டில் இருந்த இந்த குளத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து மண்டிக்கிடக்கிறது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாயத்தாமரைகள் புதர்போல் மண்டி கிடப்பதால் அந்த பகுதியில் தேங்கும் மழைநீர் குளத்தில் வடிவதற்கு சிரமம் ஏற்படுகிறது.

மேலும் குளத்தின் படித்துறையும் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. புதர் மண்டி கிடப்பதால் பாம்பு போwன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Sembanarkoil , Will the lotuses occupying the pond near Sembanarkoil be removed ?: Public expectation
× RELATED செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்