×

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம் : அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம் விண்ணப்பம்!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அவசரகால அனுமதி அளிக்குமாறு பைசர் மருந்து தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்காவில் 5 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 6 மாதம் முதல் 4 வயது வரையில் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த அவசர கால அனுமதி வழங்கக் கோரி FDA எனப்படும் அமெரிக்க மருந்து மற்றும் உணவுத் துறையிடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதற்கட்டமாக 2 தவணை தடுப்பூசிக்கு விண்ணப்பித்துள்ளதாக பைசர் கூறியுள்ளது.

எதிர்காலத்தில் புதிய வகை உருமாறிய வைரஸ் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக 3வது தவணை தடுப்பூசிக்கும் விண்ணப்பிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பக்கவிளைவுகளை தவிர்க்க குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியின் அளவு குறைக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 2.30 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து 4 வயதுக்கு கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால் பைசர் தடுப்பூசி மருந்தின் ஆய்வக பரிசோதனை விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி 4 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த FDA விரைவில் அனுமதி வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Pfizer ,US Food and Drug Administration , Corona, Vaccine, Pfizer, USA
× RELATED கொரோனா தடுப்பூசிக்கு கடும்...