கனடா பிரதமர் மீது விமர்சனம்; கர்மா மீண்டும் தாக்குகிறது: நடிகை கங்கனாவின் பதிவால் பரபரப்பு

மும்பை: கனடா பிரதமர் விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா வெளியிட்ட பதிவில், ‘கர்மா மீண்டும் தாக்குகிறது’ என்று தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி திட்டத்தை கண்டித்து கனடா நாட்டு மக்கள் போராடி வரும் நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை; நலமாக உள்ளேன். வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக எனது பணிகளை கவனிக்கிறேன். மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக மக்கள் போராடியதால், அவர் குடும்பத்துடன் தலைமறைவான செய்தி குறித்து பாலிவுட் சர்ச்சை நடிகை கங்கனா வெளியிட்ட பதிவில், ‘கர்மா மீண்டும் தாக்குகிறது’ என்று கனடாவின் ஒட்டாவாவில் நடந்து வரும் போராட்டங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளார். முன்னதாக கடந்தாண்டு டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, அந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அப்போது கங்கனா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரச்னை வந்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘கர்மா மீண்டும் தாக்குகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: