×

கோதாவரி - கிருஷ்ணா, காவிரி - பெண்ணாறு உட்பட 5 நதிகள் இணைப்பு திட்டம்: கென்-பெட்வாவுக்கு ரூ.44 ஆயிரம் கோடி

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் உள்ள கென்- பெட்வா நதிகள் இணைப்புக்கு  ரூ.44,605 கோடி செலவிடப்படும். இந்த திட்டத்தின் மூலம் 9.08 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும். மேலும், 103 மெகாவாட் நீர்மின்சக்தி  மற்றும் 27 மெகாவாட் சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்துக்காக 2021-22ம் ஆண்டில் ரூ.4,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் ரூ.1,400 கோடி ஒதுக்கப்படும். அதே போல், தமன்கங்கா-பிஞ்சால், பர்-தபி-நர்மதா, கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணாறு, பெண்ணாறு - காவிரி நதிகள் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பயனடையும் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட உடன் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு உதவி அளிக்கும்,’ என தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

15 - மகாநதி - கோதாவரி
16 - கோதாவரி - கிருஷ்ணா
17 - கோதாவரி - கிருஷ்ணா
18 - கோதாவரி - கிருஷ்ணா
19 - கிருஷ்ணா - பெண்ணாறு
20 - கிருஷ்ணா - பெண்ணாறு
21 - கிருஷ்ணா - பெண்ணாறு
22 - பெண்ணாறு - காவேரி
23 - காவேரி - வைகை - குண்டாறு

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
* மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.
* இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும்.
* 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிகளில் 200 கல்வி டிவி சேனல்கள் தொடங்கப்படும்.
* 1.50 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்படும்.
* நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
* நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும்.
* நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தப்படும் முறை அறிமுகம் செய்யப்படும். ஒரே நாடு ஒரே ஆவணப்பதிவு திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
* பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.
* பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.48,000 கோடியில் 80 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன.
* வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டங்கள்.
* நகர்ப்புற திட்டமிடலை மாற்றியமைக்க குழு அமைப்பு.
* 1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒரு கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்.
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் அறிவிக்கப்படும்.
* இந்திய பொருளாதார வளர்ச்சி இலக்கு 9.2 சதவீதம்.
* நிதிபற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதம்.
* 2022-23 நிதியாண்டில் மொத்த செலவினங்கள் ரூ.39.45 லட்சம் கோடி.
* கடன் அல்லாமல் மொத்த வருவாய் ரூ.22.84 லட்சம் கோடி இலக்கு.
* தனிநபர் வருமான உச்சவரம்பில் மாற்றமில்லை.
* திருத்தப்பட்ட வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம்.
* ஸ்டார்ட்-அப்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் வரை மானியம். தகுதியான ஸ்டார்ட்அப்களுக்கு வரி சலுகை.
* டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைக்கு 30 சதவீத வரி விதிப்பு.
* குடைகளுக்கு 20 சதவீத சுங்கவரி.
* ஸ்டீல் உதிரி பாகங்களுக்கான வரி விலக்கு மேலும் ஓராண்டு நீட்டிப்பு.
* ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருமான வரிக்கழிவு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிப்பு.
* அக்.1 முதல் எத்தனால் கலக்காத பெட்ரோல் விலை ரூ.2 உயர்வு.

* டிஜிட்டல் கரன்சியா? அப்படின்னா என்ன?
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், ‘இந்தியாவுக்கு என தனி டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார். ரிசர்வ் வங்கி மூலமாக இந்த டிஜிட்டல் ரூபாய் 2022-23ம் நிதியாண்டில் அறிமுகமாகிறது. இதற்கென புதிய ஒன்றிய வங்கி அமைய உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் ஊக்கமடையும். டிஜிட்டல் ரூபாய் என்பது ஒன்றிய வங்கியால் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் சட்டப்பூர்வ பணம். சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி நாம் பயன்படுத்தும் காகித ரூபாயின் டிஜிட்டல் வடிவமாகும். இதனால் பரிவர்த்தனைகள் எளிமைப்படுத்தப்படும். ஆனால், இது கிரிப்டோ கரன்சி அல்ல. இது தனியார் கிரிப்டோ கரன்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.


Tags : Godavari ,Krishna ,Cauvery ,Pennaru ,Ken-Bedwa , Godavari - Krishna, Cauvery - 5 rivers including Pennaru project: Rs 44,000 crore for Ken-Petwa
× RELATED மூச்சை அடக்கினால் மனது அடங்கும்