×

புதுகை அருகே பல்லாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஆளுருட்டி மலைப் பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலபாரதி என்பவரால் ஆளுருட்டி மலையின் கீழ்பகுதியில் உள்ள குகைத்தளத்தில், நட்சத்திர கூட்டத்தை குறிக்கும் வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டது. தற்போது ஆளுருட்டி மலையின் மேற்பகுதியில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆளுருட்டி மலையின், உச்சிப் பகுதியை நோக்கி செல்லும் பாதையின் நடுமலைப்பகுதியில் புதர்மண்டிய நிலையில், ஒரு குகை பகுதியில் பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி ராகுல் பிரசாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டதில்,

குகைப்பகுதியின் தென்புறம் செஞ்சாந்து ஓவியங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஓவியங்களின் பின்புறம் உள்ள சொரசொரப்பான பாறையின் மேல் ஒருவிதமான வழவழப்பான திரவம் பூசப்பட்டு, அதன்மேல் பளிச்சென்று தெரியும் வண்ணம் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில், பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆண்களுக்கு பிறகு புதிதாக இந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Discovery of thousands of years old rock paintings near Pudukai
× RELATED தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு...