ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு சென்ற 159 சேலைகள் பறிமுதல்-வாலாஜாவில் தேர்தல் பறக்கும்படை அதிரடி

வாலாஜா : வாலாஜாவில் உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு சென்ற 159 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று காலை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் எஸ்எஸ்ஐ லோகநாதன் உள்ளிட்ட பறக்கும் படையினர் சோளிங்கர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் 159 சேலைகள் இருந்தது. விசாரணையில் வேனில் வந்தவர் ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்த சல்மான் உசேன் என்பதும், இவர் வேன்களில் ஊர் ஊராக சென்று சேலை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் வேனுடன் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் பாக்கியநாதனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: