டெல்லி : இன்றைய பட்ஜெட் விவசாயம் உட்பட அனைத்து துறைகளின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று நிதித்துறை இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு துறையின் தேவைகளுக்கு ஏற்ப,உள்ளடக்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் பங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.