×

சென்னையில் 3வது நாளில் 60 சுயேச்சைகள் மனு தாக்கல்

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து 3-வது நாளாக நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 60 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்தனர். அதன்படி இதுவரை மொத்தம் 64 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1,37,06,793 ஆண் வாக்காளர்களும்,  1,42,45,637 பெண் வாக்காளர்களும், 4,324 மூன்றாம் பாலின  வாக்காளர்களும் என மொத்தம் 2,79,56,754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 28ம் தேதி முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி காலை 10 மணி முதல் நகர்புற உள்ளாட்சி  தேர்தலுக்கான வேட்புமனு  தாக்கல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கு  37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதன்படி முதல் இரண்டு நாட்கள் 4 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மூன்றாவது நாளாக வேட்பு மனு தாக்கல் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து நேற்று மட்டும் ஆண் வேட்பாளர்கள் 35 பேர், பெண் வேட்பாளர்கள் 25 பேர் என நேற்று மட்டும் 60 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். அதன்படி சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கு இதுவரை மொத்தம் ஆண்கள் 38 பேர், பெண்கள் 26 பேர் என 64 வார்டுகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Tags : 60 Independents ,Chennai , 60 independientes presentaron una petición el tercer día en Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...