29வது மாடியில் இருந்து கீழே குதித்து அமெரிக்க முன்னாள் அழகி தற்கொலை

நியூயார்க்: அமெரிக்காவில் 2019ம் ஆண்டு ‘மிஸ் அமெரிக்கா’ அழகி பட்டம் வென்ற இளம் பெண் 29வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த ‘மிஸ் அமெரிக்கா’ அழகி போட்டியில்  பட்டம் வென்றவர் செஸ்லி கிறிஸ்ட் (30). இவர் நியூயார்க் நகரில் 60 மாடிகளை கொண்ட ஒரியன் கட்டிடத்தின் 9வது மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடைசியாக 29வது மாடியில் அவர் நின்றிருந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 29வது மாடியில் இருந்தே அவர் கீழே குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. செஸ்லி கிறிஸ்ட் தற்கொலை குறித்து நியூயார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செஸ்லி கிறிஸ்ட் மறைவுக்கு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து இரங்கல் தெரிவித்தார். அவர்தனது சமூகவலைதளத்தில், ‘செஸ்லியின் மரண செய்தி இதயத்தை சுக்குநூறாக்கி விட்டது. இதை நம்ப முடியவில்லை. உங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருக்கும். செஸ்லிக்கு என்னுடைய இதய அஞ்சலி’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: