×

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ; தலைமை நீதிபதியாக நியமனம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2021 ஜனவரி முதல் பதவி வகித்து வந்த  சஞ்சீப் பானர்ஜி 2021  நவம்பர் மாதம் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜஸ்தானை சேர்ந்த முனீஸ்வர் நாத் பண்டாரி 2021  நவம்பர் 22ம் தேதி நியமிக்கப்பட்டார். கடந்த நவம்பர் முதல் 2  மாதங்களுக்கும் மேலாக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த  முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்  செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த டிசம்பர் 14 மற்றும் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  ரமணா தலைமையிலான நடைபெற்ற கொலீஜிய கூட்டத்தில் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி  வகித்துவரும் முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி விரைவில்  வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. முனீஸ்வர் நாத் பண்டாரி 2023 ஜனவரியில்  ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:வரலாற்று சிறப்புமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீதி நிர்வாகத்தில் தங்களது அனைத்து முயற்சிகளுக்கும் துணைநிற்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chennai High Court ,Chief Justice ,Muneeswarnath Bandari ,Supreme Court Collegium , el presidente del Tribunal Superior de Chennai, Muneeswarnath Bandari; Nombramiento como Presidente del Tribunal Supremo: Recomendado por el Colegio de la Corte Suprema
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...