×

பிப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளி வகுப்புகளைத் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்: இடைவெளி விட்டு மாணவர்கள் அமர ஏற்பாடு

திருச்சி: நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் துவக்கப்பட்டு, சில மாதங்களில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 முதல் 12 வகுப்புகள் வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 1 ஆம் தேதி, 1 முதல் 12 வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் திருச்சியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மேஜை, நாற்காலி, ஜன்னல் உள்ளிட்டவை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வண்ணம் பள்ளி நுழைவுவாயிலில் உடல்வெப்ப பரிசோதனைக் கருவிகள் மற்றும் கிருமி நாசினிகள் வைக்கப்பட்டிருக்கும். பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. நாளை முதல் பள்ளிகள் தொடங்க உள்ளதால் பள்ளிக்கு வர மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியது.             


Tags : School, classes, cleanliness, space, students
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...