×

வி.கே.புரம் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

வி.கே.புரம் : விகேபுரம் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன. வி.கே.புரம் அருகே உள்ள மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்டது செட்டிமேடு என்ற மலையடிவார கிராமம். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த அந்தோணி என்பவரது தோட்டத்தில் நேற்று அதிகாலை யானைகள் கூட்டம் ஒன்று புகுந்து பனை, தென்னைகளை பிடுங்கி எரிந்து நாசம் செய்துள்ளது. இது சம்பந்தமாக அங்குள்ள விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் யானையை விரட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே இப்பகுதியில் சிறுத்தைகள் ஆடு, நாய் போன்றவைகளை பிடித்துச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது யானையும் கூட்டமாக இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து பனை மற்றும் தென்னை மரங்களை பிடுங்கி எரிந்து நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மலையடிவார பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : VKpuram , VKpuram: Elephants roared in the garden near VKpuram. Manimuttaru near VKpuram is under the municipality
× RELATED வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு