×

பெங்களூரு புல்சை பந்தாடிய தமிழ் தலைவாஸ்: இன்று அரியானா-குஜராத், டெல்லி-யுமும்பா மோதல்

பெங்களூரு : 12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ லீக் கபடி போட்டிகள் பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று தமிழ் தலைவாஸ் அணி தனது 14வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.  வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் ஆடிய தமிழ் தலைவாஸ் வீரர்கள் `கிடுக்கிப்பிடி’யில் கில்லாடியாக செயல்பட்டனர். கடைசியாக விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெறாத நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தமிழ் தலைவாஸ் அணி விளையாடியது. போட்டியின் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் சுதாரித்த தமிழ் தலைவாஸ் அதிரடியை காட்டினர்.

தொடர்ந்து புள்ளிகளை குவித்தனர். இதனால் புள்ளிகள் பெங்களூருவை விட இரட்டிப்பானது. பெங்களூரு அணியை அடுத்தடுத்து ஆல் அவுட் செய்தது தலைவாஸ் அணி. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 42க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அசத்தியது. விளையாடிய 14 போட்டியில் நான்கு வெற்றி, நான்கு தோல்வி, 6 டிராவுடன் 39 புள்ளிகளுடன் 9வது இடத்தில் தமிழ் தலைவாஸ் அணி உள்ளது. முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 51-30 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வென்றது. இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்- குஜராத் ஜெயன்ட்சும், 8.30 மணிக்கு தபாங் டெல்லி- யு மும்பா அணிகள் மோதுகின்றன.

Tags : Tamil Nadu ,Taliban ,Bangalore Bulls ,Haryana ,Gujarat ,Delhi ,Yumumba , Bangalore Bulls, Bandatiya, Tamil Talawas
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...