×

எஸ்.குளவாய்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல்; ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே எஸ்.குளவாய்பட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டி ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் 100 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பட்டியலில் 6- வது இடத்தில் எஸ்.குளவாய்பட்டி நெல் கொள்முதல் நிலையம் இருந்தது.

இதனால் வரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் சுமார் 3,000- க்கு மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. திடீரென மழை பெய்தால் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமடையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சேந்தாகுடி, கத்தக்குறிச்சி, வெண்ணவாழ்குடி, வேங்கிடக்குளம், தட்சணாபுரம், குப்பக்குடி உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் உள்ள 1,200 ஹெக்டேர் பரப்பளவில் விளைவிக்கக்கூடிய நெல்மூட்டைகள் எஸ்.குளவாய்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரப்படுகிறது.


பிரச்சனை குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் கூறினர். நெல் கொள்முதல் நிலையம் தொடங்கவில்லை என்றாலும் ஒட்டுமொத்த நெல்மூட்டைகளையும் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.                  


Tags : Paddy Purchase Station ,Gloubatti , S. Kulavaipatti, Paddy Procurement Station, Closure, Collector, Farmers
× RELATED தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்...