×

2012 முதல் வூஹான் ஆய்வகத்தில் நடந்தவை குறித்து சீன கட்டுரைகளை மொழிபெயர்க்கும் இந்திய விஞ்ஞான தம்பதி பகீர் தகவல்

* ‘ஆர்எஸ்பிடிகோவி/4491’ வைரஸ் தொடர்ச்சி தான் கொரோனாபுனே: 2012 முதல் வூஹான் ஆய்வகம் சார்பில் வெளியான சீன மொழி கட்டுரைகளை இந்திய விஞ்ஞான தம்பதிகள் மொழிபெயர்த்து, அதன் விபரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கொரோனா உருவாக காரணமாக இருந்தது‘ஆர்எஸ்பிடிகோவி/4491’ வைரஸ் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியது என்றும் கூறியுள்ளனர். சமூக வலைதளான டுவிட்டரில் ‘TheSeeker268’ என்ற தளத்தில் ‘கோவிட் -19 எங்கிருந்து உருவானது?’ என்பது குறித்து பலநாடுகளின் அறிவுஜீவிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ‘TheSeeker268’ தளத்தின் நோக்கமே, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உறுதியான ஆதாரங்களை சேகரிக்க அமைக்கப்பட்ட ‘டிராஸ்டிக்’ குழுவாகும். உலகளவில் பலர் இந்த தளத்தில் தங்களது பதிவையும், கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர், கொரோனா வைரஸ் வூஹான் வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்துதான் தோன்றியது என்றும், அந்த வைரஸ் சீனாவின் மீன் மார்க்கெட்டில் இருந்து தோன்றவில்லை என்று அடித்துக் கூறுகிறார்கள். இவ்வாறாக, கொரோனா குறித்து பலரும் சீன ஆய்வகத்தை குறிவைத்து கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பும், தொடர்ந்து சீனா வைரஸ் என்று அடிக்கடி கூறி வருகிறார். கொரோனா வைரசின் தோற்றம் குறித்து விசாரணை நடத்த தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.  ‘TheSeeker268’ என்ற குழுவில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த விஞ்ஞான ஜோடி டாக்டர் மோனாலி சி ரஹல்கர் மற்றும் டாக்டர் ராகுல் பாஹுலிகர் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள், சீன ஆய்வகம் தொடர்பாக கடந்த காலங்களில் வெளியான செய்திகளை, அந்நாட்டு மொழில் இருந்து மொழிபெயர்த்து அதன் மர்மங்களை ஆராய்ந்து வருகின்றனர். தற்போது இவர்கள் ‘டிராஸ்டிக்’ குழுவில் பகிர்ந்துள்ள கட்டுரையில், ‘சீன கல்வித் தாள்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், 2012ம் ஆண்டில் ஆறு சுரங்கத் தொழிலாளர்கள் யானானில் உள்ள மோஜியாங்கிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் சுரங்கத்தில் பணியாற்றிய போது இறந்தார்கள். இதுதொடர்பாக 2013ம் ஆண்டு வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (WIV) இயக்குனர் டாக்டர் ஷி ஜெங்லி மற்றும் அவரது குழுவினர் சுரங்கத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்த மாதிரிகளை  சேகரித்துக் கொண்டு தங்கள் ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், சுரங்கத்தின் குகையில் இருந்த வவ்வாலின் பூஞ்சை இருந்ததால், அதன் மூலம் 6 தொழிலாளர்களும் இறந்ததாக டாக்டர் ஷி ஜெங்லி குழுவினர் அறிவித்தனர். ஆனால், டாக்டர் ஷி கெங்லி வெளியிட்ட மற்றொரு செய்தியில், கொரோனா என்ற வைரசை கண்டுபிடித்தாக கூறியுள்ளார். அதற்கு அவர்கள் ‘ஆர்எஸ்பிடிகோவி / 4491’ என்று பெயரிட்டனர்’ என்று தெரிவித்துள்ளனர். மேலும், சண்டே டைம்ஸ் பத்திரிகையின் செய்திகளின்படி, வூஹான் வைராலஜி நிறுவனம் 2015-17ம் ஆண்டுகளில் இந்த புதியவகை வைரஸ் தொடர்பான தகவல்களை குறிப்பிட்டுள்ளது. மிகவும் சர்ச்சைக்குரிய வைரஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, அந்த வைரஸ் கொரோனாவாக உருமாறி உலகலாளவிய தொற்றுநோயாக பரவியுள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில், வூஹானில் உள்ள ஆய்வகத்தின் தவறு என்று குறிப்பிட்டுள்ளது….

The post 2012 முதல் வூஹான் ஆய்வகத்தில் நடந்தவை குறித்து சீன கட்டுரைகளை மொழிபெயர்க்கும் இந்திய விஞ்ஞான தம்பதி பகீர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bhakir ,Wuhan ,Wuhan laboratory ,
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...