×

பெகாசஸ் விவகாரம்: ஒட்டுக்கேட்கப்பட்டது உண்மை என கண்டுப்பிடிப்பு; விசாரணை குழுவிடம் ஆதாரங்களை வழங்கியது சைபர் கிரைம் நிபுணர் குழு

டெல்லி: இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்பட்டது உண்மை என நிபுணர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள விசாரணை குழுவிடம் சைபர் கிரைம் நிபுணர்கள், ஆதாரங்களை அளித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தங்களது தொலைப்பேசிகளை சைபர் கிரைம் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தனர். மனுதாரர்களின் 7 ஐபோன்கள், 6 ஆண்ட்ராய்டு போன்களை  2 வெவ்வேறு சைபர் கிரைம் நிபுணர் குழு ஆய்வு செய்தது. பெகாசஸ் மென் பொருளை பயன்படுத்தி செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முதல் நாளிலேயே எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். தவறான தகவல் அளித்த ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கோரி காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். நாளை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முதல் நாளிலேயே எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Pegasus ,Cyber Crime Expert Panel , Pegasus affair, tapped, fact, inquiry panel, expert panel
× RELATED பெகாசஸ் சி12ஐ இஎக்ஸ்