அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா

ஈரோடு: தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற  வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு நேற்று முன்தினம் காலை உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையினர் பரிந்துரையின்பேரில் அவர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். தனிமைக்காலம் முடியும் வரை கட்சியினர்,  அதிகாரிகள், பொதுமக்கள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அமைச்சர்  கூறியதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: