×

திருப்பூரில் இளநீர் விற்று வரும் தாயம்மாள் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்: மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: ஆண்டின் முதல் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, பிரதமர் மோடி 85 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதை யொட்டி,  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வருமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டார். திருப்பூரில் இளநீர் விற்று வரும் தாயம்மாள் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். வறுமை நிலையிலும் பள்ளிக்கு நன்கொடை அளித்த தாயம்மாளின் செயல் பாராட்டுக்குரியது.

அவரின் இந்த உதவிக்குப் பிறகு பள்ளியானது வளர்ச்சியடைந்துள்ளது. தன் ஏழ்மையிலும் பள்ளிக்கு உதவி செய்த தாயம்மாள் அனைவராலும் பாராட்ட வேண்டியவர். இவரை போலவே தான் எனது எண்ணமும் இருக்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் 2047-ல் இந்தியா பாதுகாப்புத்துறையில் வல்லரசாக இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார்; இவரை போன்ற தேசிய சிந்தனை கொண்ட இளைஞர்கள் இருக்கும் வரை இந்தியாவால் முடியாதது ஏதுமில்லை. இது போன்று அனைவரும் கல்வி, தேச நலன் மற்றும் வளர்ச்சி மீது கவனம் செலுத்த வேண்டும்.

கடமையை உணரும் இடத்தில், கடமையே முதன்மையானது இருக்கும். ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. இந்தியா கல்வி மற்றும் அறிவின் புனித பூமியாக இன்றளவும் இருந்து வருகிறது. நமது நாட்டின் பெருமை நமக்கானது மட்டும் அல்ல. உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Modi ,Tiruppur ,Mann Ki Bath , Rs 1 lakh donated to Thayammal School in Tirupur: PM Modi lauds Mann Ki Baat
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...